பிற விளையாட்டு

பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி + "||" + Formula 1 car racing: England player Hamilton wins

பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
பார்முலா 1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.
சகிர், 

இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். இந்த போட்டியின் போது பிரான்ஸ் வீரர் ரோமைன் குரோஸ்ஜீன் (ஹாஸ் அணி) கார் தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. பரபரப்பான இந்த விபத்தில் சிக்கிய அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் சற்று நேரம் பாதிக்கப்பட்ட இந்த போட்டி தொடர்ந்து நடைபெற்றது. 

இதில் கடந்த சுற்றிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்து விட்ட இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 59 நிமிடம் 47.515 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இந்த சீசனில் அவர் பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1.254 வினாடி பின்தங்கி 2-வது இடத்தையும், தாய்லாந்து வீரர் அலெக்சாண்டர் அல்பான் (ரெட்புல் அணி) 8.005 வினாடி பின்தங்கி 3-வது இடத்தையும் பெற்றனர். இதுவரை நடந்துள்ள 15 சுற்றுகள் முடிவில் ஹாமில்டன் 332 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 6-ந் தேதி பக்ரைனில் நடக்கிறது.