அடுத்த ஆண்டு‘பார்முலா1’ கார் பந்தயத்தில் கால் பதிக்கிறார் ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் சூமாக்கரின் மகன் மிக் சூமாக்கர்


அடுத்த ஆண்டு‘பார்முலா1’ கார் பந்தயத்தில் கால் பதிக்கிறார் ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் சூமாக்கரின் மகன் மிக் சூமாக்கர்
x
தினத்தந்தி 3 Dec 2020 12:09 AM GMT (Updated: 3 Dec 2020 5:58 AM GMT)

‘பார்முலா1’ கார் பந்தயத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் சூமாக்கரின் மகன் மிக் சூமாக்கர் அடுத்த ஆண்டு (2021) ‘பார்முலா1’ கார் பந்தயத்தில் கால் பதிக்கிறார்.

ஜெர்மனி,

* ‘பார்முலா1’ கார் பந்தயத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் சூமாக்கரின் 21 வயது மகனான மிக் சூமாக்கர் தனது தந்தையின் வழியை பின்பற்றி அடுத்த ஆண்டுக்கான (2021) ‘பார்முலா1’ கார் பந்தயத்தில் கால் பதிக்க இருக்கிறார். இந்த சீசனுக்கான ‘பார்முலா2’ கார் பந்தயத்தில் சாம்பியன் பட்ட ரேசில் முன்னிலையில் இருந்து வரும் மிக் சூமாக்கரை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஹாஸ் ‘பார்முலா1’ அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

*நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஹாமில்டனில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

* 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஐதராபாத்-ஜாம்ஷெட்பூர் இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-ஒடிசா எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

Next Story