பிற விளையாட்டு

‘நம்பர் ஒன்’ பேட்மிண்டன் வீரர் கென்டோ மோமோட்டாவிற்கு கொரோனா தொற்று + "||" + Kento Momota tests positive for COVID-19, Japan withdraws from Thailand Open

‘நம்பர் ஒன்’ பேட்மிண்டன் வீரர் கென்டோ மோமோட்டாவிற்கு கொரோனா தொற்று

‘நம்பர் ஒன்’ பேட்மிண்டன் வீரர் கென்டோ மோமோட்டாவிற்கு கொரோனா தொற்று
‘நம்பர் ஒன்’ பேட்மிண்டன் வீரர் கென்டோ மோமோட்டாவிற்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
டோக்கியோ,

உலகின் ‘நம்பர் ஒன்’ பேட்மிண்டன் வீரரும், இரண்டு முறை உலக சாம்பியனுமான ஜப்பான் வீரர் கென்டோ மோமோட்டா பாங்காக்கில் வருகிற 12–ந்தேதி தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். 

கார் விபத்தில் சிக்கி மீண்ட அவர் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு தாய்லாந்து ஓபன் மூலம் சர்வதேச பேட்மிண்டன் போட்டிக்கு திரும்ப இருந்தார். தாய்லாந்து புறப்படுவதற்கு முன்பாக அவர் உள்பட 23 ஜப்பான் வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதில் 26 வயதான கென்டோ மோமோட்டா மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தாய்லாந்து ஓபனில் இருந்து உடனடியாக விலகினார். 

அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜப்பான் அணியினரையும் தாய்லாந்து போட்டிக்கு அனுப்புவதில்லை என்று ஜப்பான் பேட்மிண்டன் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.