தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jan 2021 10:49 PM GMT (Updated: 6 Jan 2021 10:49 PM GMT)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பாங்காக்கில் நடக்கிறது.

பாங்காக்,

யோனக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பாங்காக்கில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க உள்ள பி.வி.சிந்து, சாய்னா நேவால், சாய் பிரனீத் உள்ளிட்ட இந்திய குழுவினர் அனைவருக்கும் அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சி எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு அவர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது உடல்தகுதி நிபுணரை பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாக டுவிட்டரில் குற்றம் சாட்டியிருந்தார். இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட இந்திய பேட்மிண்டன் சம்மேளனம், தாய்லாந்து பேட்மிண்டன் சம்மேளனத்திடம் பேசியது. 

இதைத் தொடர்ந்து வீரர், வீராங்கனைகள் உடல்தகுதி நிபுணரை தங்களது அறையில் சந்தித்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பு கொரோனா நடைமுறைகளுக்குட்பட்டு முன்கூட்டியே அனுமதி பெற்று சந்திக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story