பிற விளையாட்டு

சாய்னா நேவால், எச்.எஸ்.பிரனாய்க்கு கொரோனா பாதிப்பு இல்லை ;போட்டியில் கலந்து கொள்ள அனுமதி + "||" + Saina Nehwal, HS Prannoy test positive for coronavirus

சாய்னா நேவால், எச்.எஸ்.பிரனாய்க்கு கொரோனா பாதிப்பு இல்லை ;போட்டியில் கலந்து கொள்ள அனுமதி

சாய்னா நேவால், எச்.எஸ்.பிரனாய்க்கு கொரோனா பாதிப்பு இல்லை ;போட்டியில் கலந்து கொள்ள அனுமதி
இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சாய்னா நேவால், எச்.எஸ்.பிரனாய்க்கு இன்று காலை கொரோனா உறுதியான நிலையில், தற்போது கொரோனா இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாங்காங்க்

யோனக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பாங்காக்கில் நடக்கிறது.  இதற்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்து ஓபன் போட்டி இன்று முதல் 17-ம் தேதி வரையிலும், டொயோட்டா தாய்லாந்து ஓபன் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும், பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் நடக்கிறது.

இதில் பங்கேற்க இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அனுராக் காஷ்யப், எச்.எஸ். பிரனாய், கிடம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, அஸ்வினி பொன்னப்பா, சவுரப் வர்மா, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சாய்னா நேவால், எச்.எஸ்.பிரனாய்க்கு இன்று காலை கொரோனா உறுதியான நிலையில், தற்போது கொரோனா இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர்கள் தாய்லாந்து ஒபன் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சாய்னா தரப்பில் அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தனக்கு  குழப்பமாக இருப்பதகவும் கூறி இருந்தார்.