பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த் வெற்றி + "||" + Thailand Open Badminton Saina in first round, Srikanth wins

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த் வெற்றி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த் வெற்றி
யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
பாங்காக், 

இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் கொரோனா பரிசோதனை முடிவு குழப்பத்தில் சிக்கி மீண்ட இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 21-15 என்ற நேர்செட்டில் மலேசியாவின் கிசோனாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-12, 21-11 என்ற நேர்செட்டில் சக நாட்டவர் சவுரப் வர்மாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த போட்டிக்கு முன்னதாக ஸ்ரீகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்த போது மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது சர்ச்சையானது. 4-வது முறையாக தனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தாய்லாந்து போட்டி அமைப்பாளர்கள் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவர் டுவிட்டர் மூலம் வேதனை தெரிவித்து இருந்தார். இதையடுத்து உலக பேட்மிண்டன் சம்மேளனம், தாய்லாந்து ஓபன் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரையும் பாதுகாப்புடனும், சவுகரியமாகவும் நடத்த வேண்டும் என்று போட்டி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
2. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிகள் ஏமாற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஜோடிகள் தோல்வியை தழுவின.
3. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா வெளியேற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனிடம் தோல்வியடைந்தார்.
4. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
5. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் ஆகியோர் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.