தமிழகம், புதுச்சேரியில் வரும் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை; இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட வாக்கு பதிவு | தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். | தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் ஏற்பாடுகளை துவங்கி கண்காணித்து வருகிறோம்-சுனில் அரோரா | சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன - சுனில் அரோரா | தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன-சுனில் அரோரா | இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் |

பிற விளையாட்டு

கொரோனா பாதிப்பு : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய ஜப்பான் அரசு ஆலோசனை + "||" + Japan privately concludes Tokyo Olympics should be cancelled due to COVID-19, say reports

கொரோனா பாதிப்பு : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய ஜப்பான் அரசு ஆலோசனை

கொரோனா பாதிப்பு : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய ஜப்பான் அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோக்கியோ

கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்  இந்த ஆண்டும் ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது என தகவல் வெளியானது

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய  ஜப்பா\ன் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் "ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோ 2020 குறித்த எந்தவொரு அதிகாரபூர்வஅறிவிப்பு  டோக்கியோ ஏற்பாட்டுக் குழு மற்றும் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வரும்" என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழு டுவிட்டரில் கூறி உள்ளது.

பல முன்னேறிய நாடுகளை விட ஜப்பான் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால் வெளிநாட்டில் இருந்து வருபர்களுக்கு   தடைவிதிக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ மற்றும் முக்கிய நகரங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பானில் சுமார் 80 சதவீத  மக்கள் இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டி  நடத்தப்படுவதை விரும்பவில்லை என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன, விளையாட்டு வீரர்களின் வருகை வைரஸை மேலும் பரப்பும் என்ற அச்சப்படுகின்றனர் என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்வது குறித்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று ஜப்பானின் துணை தலைமை அமைச்சரவை செயலாளர் மனாபு சாகாய், செய்தித் தொடர்பாளர் இன்று  செய்தியாளர்களிடம் கூறினார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் நேற்று   அளித்த பேட்டியில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை  நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள்   ஜூலை 23 ஆம் தேதி ஆரம்பமாகாது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை, "என்று அவர் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் -இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை
டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் என இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
2. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் கிடையாது - போட்டி அமைப்பாளர்கள் தகவல்
அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.