பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா வெளியேற்றம் + "||" + Thailand Open Badminton: Sindhu, Samir Verma eliminated

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா வெளியேற்றம்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா வெளியேற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனிடம் தோல்வியடைந்தார்.
பாங்காக்,

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 13-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) 38 நிமிடங்களில் தோற்று வெளியேறினார். 

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 13-21, 21-19, 20-22 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீரர் ஆன்டெர்ஸ் ஆன்டன்செனிடம் (டென்மார்க்) போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடங்கள் நீடித்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்த நிலையில் ஆண்கள் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு இரட்டையரில் சாய்ராஜ்-அஸ்வினி ஜோடிகள் அரைஇறுதிக்கு முன்னேறி ஆறுதல் அளித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகி வருகிறேன்; இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி
சர்வதேச போட்டிகள் போதிய அளவில் இல்லாவிட்டாலும் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி சிறந்த முறையில் தயாராகி வருவதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து கூறியுள்ளார்.
2. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
3. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிகள் ஏமாற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஜோடிகள் தோல்வியை தழுவின.
4. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
5. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் ஆகியோர் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.