பிற விளையாட்டு

‘தாய்லாந்து போட்டியில் சந்தித்த மோசமான அனுபவம்’-பிரனாய் + "||" + ‘Bad experience in Thailand match’-Pranoy

‘தாய்லாந்து போட்டியில் சந்தித்த மோசமான அனுபவம்’-பிரனாய்

‘தாய்லாந்து போட்டியில் சந்தித்த மோசமான அனுபவம்’-பிரனாய்
சமீபத்தில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் அந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த ஒரு பேட்டியில்,
புதுடெல்லி,

 ‘இந்த போட்டிக்காக முதல்முறையாக கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இணைந்தோம். அதன் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதே எங்களுக்கு தெரியவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் எங்களது அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. 2 மணி நேரம் பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டோம். அதுவும் ஸ்டேடியத்தின் வெளியே நடக்கக்கூட அனுமதியில்லை. 2 மணி நேரம் பயிற்சி போக தினமும் 22 மணி நேரம் அறையிலேயே முடங்கினோம். சக வீரர், வீராங்கனைகளை சந்திக்க இயலவில்லை. இது ஒரு மோசமான அனுபவம். சில நாட்களுக்கு பிறகு மனதளவிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதை எப்படி கையாள்வது என்பது புரியாமல் தடுமாறிப்போனேன். போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் எனக்கும், சாய்னாவுக்கும் கொரோனா இருப்பதாக கூறினர். அன்று காலை முதல் இரவு வரை ஆஸ்பத்திரியில் இருந்தோம். யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறினர். போட்டிக்கான பதிவு விலக்கிக்கொள்ளப்பட்டது. இறுதியில் உங்களுக்கு ஒன்றும் இல்லை, போகலாம் என்று கூறி அனுப்பி வைத்தனர். எனது பேட்மிண்டன் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாட்களில் இதுவும் ஒன்று’ என்றார்.