பிற விளையாட்டு

தேசிய கைப்பந்து போட்டியில் மாணவர்கள் சாதனை + "||" + Student achievement in national volleyball tournament

தேசிய கைப்பந்து போட்டியில் மாணவர்கள் சாதனை

தேசிய கைப்பந்து போட்டியில் மாணவர்கள் சாதனை
தேசிய கைப்பந்து போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
ராமநாதபுரம், 

கோவா மாநிலத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்ற தேசிய கைப்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக அணி இறுதி போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதியது. 

இப்போட்டியில் வெற்றி பெற்று தமிழகஅணி பதக்கத்தை கைப்பற்றியது. தமிழக அணி சார்பில் விளையாடி வெற்றி பெற காரணமாக இருந்து சாதனை படைத்து தமிழகத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்த ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மங்களேஸ்வரன், சஞ்சய்ராஜா, முவிஜோசப், ஆகியோரை பள்ளியின் தாளாளர் அருட்சகோதரர் சவரிமுத்து, பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ரேமண்ட் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.