தடகள போட்டியில் 24 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்து தங்கம் வென்ற வீரர் + "||" + The gold medalist broke the 24-year-old national record in athletics
தடகள போட்டியில் 24 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்து தங்கம் வென்ற வீரர்
தடகள போட்டியில் 24 ஆண்டு கால தேசிய சாதனையை சுனில் தவார் என்ற தடகள வீரர் முறியடித்து தங்க பதக்கம் வென்று உள்ளார்.
கவுகாத்தி,
அசாமில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் 20 வயதுக்கு உட்பட்டோருக்குகான ஆடவர் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில், மத்திய பிரதேச மாநிலத்தின் சுனில் தவார் என்பவர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்.
அவர் 5 ஆயிரம் மீட்டர் தடகள போட்டியில் 14 நிமிடங்கள் 13.95 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்க பதக்கம் வென்றார். இதற்கு முன் கடந்த 1996ம் ஆண்டு ஆகஸ்டு 23ந்தேதி கோஜென் சிங் என்பவர் 14 நிமிடங்கள் 14.48 வினாடிகளில் இலக்கை அடைந்தது சாதனையாக இருந்தது.
இதனை 24 ஆண்டுகள் கழித்து தவார் முறியடித்து உள்ளார். கடந்த 2012ம் ஆண்டு லக்னோ நகரில் ராகுல் குமார் பால் என்பவரின் 14 நிமிடங்கள் 18.28 வினாடிகள் என்ற சாதனை பதிவையும் தவார் முறியடித்து இருக்கிறார்.