பிற விளையாட்டு

10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் முனிடா பிரஜாபதி புதிய தேசிய சாதனை + "||" + Munita Prajapati set a new national record in the 10 thousand meter race

10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் முனிடா பிரஜாபதி புதிய தேசிய சாதனை

10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் முனிடா பிரஜாபதி புதிய தேசிய சாதனை
20 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் உத்தர பிரதேச வீராங்கனை புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
கவுகாத்தி,

அசாமில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 36வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரை சேர்ந்த வீராங்கனை முனிடா பிரஜாபதி (வயது 19) புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் 10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் 47 நிமிடங்கள் 53.58 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த ஜனவரி 26ந்தேதி போபாலில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் பெடரேசன் கோப்பை போட்டியில் ரேஷ்மா பட்டேல் (வயது 16) என்பவர் 48 நிமிடங்கள் 25.90 வினாடிகளில் இலக்கை தொட்டு தங்கம் வென்றார்.

அந்த போட்டியில், முனிடா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.  அதனை ஈடு செய்யும் வகையில் இந்த போட்டியில் முனிடா தங்கம் வென்றுள்ளார்.  போட்டியில் ரேஷ்மா பட்டேலும் பங்கேற்றார்.