தனது பாட்டி மரணம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக கூறி உள்ளார்.
புதுடெல்லி
பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா வெள்ளிக்கிழமை தனது பாட்டி சீனாவில் மரணம் அடைந்தது குறித்து பற்றி டுவீட் செய்து இருந்தார். இது குறித்து சமூக ஊடகங்களில் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாகவும், இனவெறி கருத்துக்களால் திகைத்துப் போனதாகக் கூறினார். கொரோனா சீனா வைரஸ் அல்ல என குறிப்பிட்டு உள்ளார்.
சீனா புத்தாண்டு தினத்தன்று சீனாவில் அம்மாமா காலமானார்! என் அம்மா ஒவ்வொரு மாதமும் 2 முறை வருகை தருவார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அவரால் முடியவில்லை. கொரோனா எவ்வளவு முக்கியமானது என்பதை எங்களுக்கு உணர்த்தியுள்ளது . புத்தாண்டு வாழ்த்துக்கள் ”என்று ஜுவாலா கட்டா கூறி இருந்தார்.
கடந்த ஆண்டு, கொரோனா வெடித்ததிலிருந்து கட்டா இனரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் , ஆனால் அவற்றைப் புறக்கணித்து முன்னேறத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். "நான் உண்மையில் அவர்களுக்கு பரிதாபப்படுகிறேன். என்னை டுரோல் செய்யும் இவர்கள்தான் செல்பி கேட்டு வருவார்கள். எனவே நான் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தவில்லை, ”என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் உள்பட பல பயனர்கள் ஆதரவாக டுவீட் செய்துள்ளனர். "நீங்கள் எப்போதும் கடினமாக உழைத்து பதக்கங்களையும் பெருமையையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்தீர்கள். நான் உங்களுடன் நிற்கிறேன், எனது இரங்கலையும் தெரிவிக்கிறேன், ”என்று கோகோய் டுவீட் செய்துள்ளார்.
I am mourning the loss of my grand mom who passed away in China and to my surprise I get racist replies....and I am asked why I say covid and not Chinese virus....
What has happened to us as a society...where’s the empathy...where r we headed...and there r defenders??
Shameful!