பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தடகளத்தில் மேலும் 3 இந்தியர்கள் தகுதி + "||" + 3 more Indians qualify for Tokyo Olympics

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தடகளத்தில் மேலும் 3 இந்தியர்கள் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தடகளத்தில் மேலும் 3 இந்தியர்கள் தகுதி
தேசிய ஓபன் நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது.
ராஞ்சி, 

தேசிய ஓபன் நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த சந்தீப்குமார் 1 மணி 20 நிமிடம் 16 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன் முதலிடம் பிடித்தார். மற்றொரு அரியானா வீரரான ராகுல் 1:20:26 வினாடியில் கடந்து 2-வது இடம் பெற்றார். பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரியங்கா கோஸ்வாமி 1 மணி 28 நிமிடம் 45 வினாடியில் பந்தய தூரத்தை அடைந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன் முதலிடத்தை தனதாக்கினார். இந்த 3 பேரும் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 1 மணி 21 நிமிடமும், பெண்கள் பிரிவில் 1 மணி 31 நிமிடமும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்காகும். இதன் மூலம் நடைப்பந்தயத்தில் தகுதி பெற்று இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கே.டி.இர்பான் (ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர்), பாவனா ஜாட் (பெண்களுக்கான 20 கிலோ மீட்டர்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.