பிற விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி + "||" + State level competition

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி
மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது
மதுரை, 
மாநிலஅளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மதுரை ஆனையூரில் நேற்று பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியில் வெற்றிபெற்ற கருப்பசாமி சிலம்பாட்ட குழு மாணவர்களுக்கு ஆனையூர் முன்னாள் சேர்மன் சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார். சிலம்பாட்ட பயிற்சியாளர் பாண்டிச் செல்வி, அம்பேத்கர் ஆனையூர் சிலம்பாட்ட வாத்தியார் கண்ணன், தங்கப்பாண்டி, ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆனையூர் அரசுபள்ளி ஆசிரியர் பசுமை ஹரி பாபு, தொழில் அதிபர் உதயகுமார், நாகராஜ் பாலகுரு, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.