பிற விளையாட்டு

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு + "||" + kabadi

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு
மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கு பெற கரூர் மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு நடைபெற்றது.
கரூர்
கரூர் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் நேற்று கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கு பெற கரூர் மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு நடைபெற்றது. இதில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அணி தேர்வு நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் தலா 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கு பெற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்திருந்தார். இதில் கரூர் மாவட்ட கபடி சங்க செயலாளர் சேதுராமன் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளனூரில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி
வெள்ளனூரில் தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
2. அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
3. பொன்னமராவதி அருகே கபடி போட்டி; 43 அணிகள் பங்கேற்பு
பொன்னமராவதி அருகே கபடி போட்டி நடைபெற்றது. இதில் 43 அணிகள் பங்கேற்றன.
4. காரையூரில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
காரையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.