பிற விளையாட்டு

38 அணிகள் பங்கேற்கும் மாநில பெண்கள் கபடி - சென்னையில் நாளை தொடக்கம் + "||" + State Women's Kabaddi with 38 teams starting tomorrow in Chennai

38 அணிகள் பங்கேற்கும் மாநில பெண்கள் கபடி - சென்னையில் நாளை தொடக்கம்

38 அணிகள் பங்கேற்கும் மாநில பெண்கள் கபடி - சென்னையில் நாளை தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் மாநில பெண்கள் கபடி சென்னையில் நாளை தொடங்குகிறது.
சென்னை, 

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் மற்றும் சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கம் சார்பில் 47-வது ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் கபடி சாம்பியன்ஷிப்போட்டி சென்னை ராணி மேரி கல்லூரி மைதானத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதில் சென்னை, கோவை, திண்டுக்கல், தஞ்சாவூர், நெல்லை உள்பட 38 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போட்டி நடைபெறும். இந்த தகவலை தமிழ்நாடு கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா, சென்னை மாவட்ட செயலாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.