பிற விளையாட்டு

அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கிய பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் + "||" + Tiger Woods, Golfer who was involved in a road accident in the US

அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கிய பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்

அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கிய பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்
கோல்ப் விளையாட்டு போட்டியில் பிரபல வீரராக அறியப்படும் டைகர் உட்ஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் கோல்ப் விளையாட்டில் புகழ் பெற்ற வீரராக இருந்து வருபவர் டைகர் உட்ஸ் (வயது 45).  இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார்.

இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது.  காரில் தனியாக பயணித்த உட்ஸ் பலத்த காயம் அடைந்து உள்ளார்.  இதனையடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று அவரை மீட்டனர்.

இதன்பின்னர் சிகிச்சைக்காக அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவருக்கு காலில் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கோல்ப் விளையாட்டில் 15 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ள உட்ஸ் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு வெற்றி பெற்றார்.  அதன்பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  இதன்பின் மீண்டும் போட்டியில் பங்கேற்பது பற்றி முடிவு செய்ய இருந்த நிலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு விழாவில் வழங்கப்பட்ட உணவை காலதாமதமாக சாப்பிட்டதால் 64 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு
அரசு விழாவில் வழங்கப்பட்ட உணவை காலதாமதமாக சாப்பிட்டதால் 64 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு இலுப்பூர், விராலிமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
3. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
4. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவினை முதல்வர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார்
5. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3½ கோடியில் அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி அமைக்கப்பட்ட அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.