பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் நவீன் பூரா அரைஇறுதிக்கு தகுதி + "||" + Indian boxer Naveen Pura qualifies for semi-finals of international boxing tournament

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் நவீன் பூரா அரைஇறுதிக்கு தகுதி

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் நவீன் பூரா அரைஇறுதிக்கு தகுதி
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் நவீன் பூரா அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
புதுடெல்லி,

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் நவீன் பூரா 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் எராவியோ எட்சனை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 

இதன் மூலம் நவீன் பூரா குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

91 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் மன்ஜீத் சிங் 4-0 என்ற கணக்கில் அயர்லாந்து வீரர் ஜிடிஸ் லிஸ்சின்காஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.