சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் தீபக்குமார்


சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் தீபக்குமார்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:24 PM GMT (Updated: 26 Feb 2021 11:24 PM GMT)

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தீபக்குமார் உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

புதுடெல்லி, 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் தீபக்குமார், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஷகோபிட்டின் ஜோய்ரோவை (உஸ்பெகிஸ்தான்) நேற்று எதிர்கொண்டார். 

சாதுர்யமாக செயல்பட்ட தீபக்குமார் 4-1 என்ற கணக்கில் ஜோய்ரோவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் தீபக்குமாருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. மற்றொரு இந்திய வீரர் மன்ஜீத் சிங் (91 கிலோ) கால்இறுதியில் தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஜோதி குலியா 0-5 என்ற கணக்கில் ருமேனியாவின் லாக்ரமியாரா பெரிஜோச்சிடம் தோல்வி அடைந்தார். இந்திய வீராங்கனை பாக்யபதி கசாரியும் (75 கிலோ) கால்இறுதியுடன் நடையை கட்டினார்.

Next Story