சர்வதேச மல்யுத்த போட்டி உக்ரைனில் நடந்தது. இதில் நேற்று நடந்த 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான கலாட்ஜின்ஸ்காயுடன் (பெலாரஸ்) மோதினார்.
கீவ்,
சர்வதேச மல்யுத்த போட்டி உக்ரைனில் நடந்தது. இதில் நேற்று நடந்த 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான கலாட்ஜின்ஸ்காயுடன் (பெலாரஸ்) மோதினார். இதில் தொடக்கத்தில் எதிராளியை மடக்கித்தள்ளி 4-0 என்று வினேஷ் முன்னிலை பெற்றார். அதன் பிறகு பதிலடி கொடுத்த கலாட்ஜின்ஸ் 4-4 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து மேலும் சில புள்ளிகளை பெற்று நெருக்கடி கொடுத்தார். 25 வினாடி மீதம் இருந்த போது கலாட்ஜின்சை நிமிர விடாமல் மடக்கி அமுக்கி தொடர்ச்சியாக 4 புள்ளிகளை வசப்படுத்திய வினேஷ் போகத் முடிவில் 10-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மல்யுத்த போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில், துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.