பிற விளையாட்டு

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி + "||" + ‘A’ Division Volleyball League: Indian Bank team wins

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
சென்னை, 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 25-19, 17-25, 22-25, 25-22, 15-11 என்ற செட் கணக்கில் சுங்க இலாகாவை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் அணி 25-16, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பனிமலர் அணியை தோற்கடித்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்-சுங்க இலாகா (மாலை 4.30 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-பனிமலர் (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. மியாமி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நவோமி ஒசாகா, பியான்கா
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, கனடாவின் பியான்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
2. புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு
9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
3. இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
4. ஆந்திர பிரதேச உள்ளாட்சி தேர்தல்; அதிக இடங்களை கைப்பற்றிய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெருவாரியான இடங்களை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.
5. ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி அபார வெற்றி
ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.