பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை: மேரிகோம் தோல்வி + "||" + International Boxing: Maricom Defeat

சர்வதேச குத்துச்சண்டை: மேரிகோம் தோல்வி

சர்வதேச குத்துச்சண்டை: மேரிகோம் தோல்வி
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி, 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டின் கேஸ்டிலானோ நகரில் நடந்து வருகிறது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் அமெரிக்காவின் விர்ஜினியாவிடம் போராடி தோல்வி அடைந்தார். இதனால் மேரிகோம் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. அதே சமயம் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தங்களது அரைஇறுதி ஆட்டங்களில் வெற்றிகண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

ஆண்களுக்கான 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 5-0 என்ற கணக்கில் டென்மார்க்கின் கிவ்சோவ் நீல்செனை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். ஆஷிஷ்குமார்(75 கிலோ), சுமித் சங்வான் (81 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ) உள்ளிட்டோரும் அரைஇறுதியை எட்டினர்.

அதே சமயம் 52 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தில் உள்ள இந்திய வீரர் அமித் பன்ஹால், ஐரோப்பிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கேப்ரியல் எஸ்கோபரிடம் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.