பிற விளையாட்டு

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து + "||" + Switzerland Open Badminton: Sindhu in the final

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாசெல், 

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டை சந்தித்தார். 43 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 21-10 என்ற நேர்செட்டில் பிளிச்பெல்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்புக்கு பிறகு சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 13-21, 19-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.