பிற விளையாட்டு

உலக மல்யுத்த வீராங்கனைக்கான ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் + "||" + Wrestler Vinesh Phogat reclaims No. 1 rank with gold in Rome

உலக மல்யுத்த வீராங்கனைக்கான ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

உலக மல்யுத்த வீராங்கனைக்கான ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உலக மல்யுத்த வீராங்கனைக்கான ரேங்கிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.
ரோம், 

உலக ரேங்கிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தற்போது முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.  

கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு தங்கம் வென்றதன் மூலம் வினேஷ் போகத் முதலிடம் பிடித்துள்ளார். 53 கிலோ எடைப் பிரிவில் உலக அளவில் 14 புள்ளிகளை பெற்றுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற போட்டியில் (Matteo Pellicone Ranking Series) கனடாவின் டயானா மேரியை 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் வினேஷ் போகத் தங்கம் வென்று முதலிடம் பிடித்தார். 

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மல்யுத்த போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு தங்கபதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.