பிற விளையாட்டு

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: செயின்ட் ஜோசப்ஸ் அணி வெற்றி + "||" + A Division Volleyball League St. Joseph team wins

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: செயின்ட் ஜோசப்ஸ் அணி வெற்றி

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: செயின்ட் ஜோசப்ஸ் அணி வெற்றி
‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை, 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் ஜோசப்ஸ் அணி 25-21, 24-26, 20-25, 25-20, 16-14 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை போராடி வீழ்த்தியது. கடைசி நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஐ.சி.எப்.-இந்தியன் வங்கி (மாலை 4 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-எஸ்.ஆர்.எம். (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே உறுதி செய்து விட்டது.