ஒலிம்பிக் தொடர் ஓட்டம்: பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு


ஒலிம்பிக் தொடர் ஓட்டம்: பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 17 March 2021 4:04 AM GMT (Updated: 17 March 2021 4:04 AM GMT)

கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

டோக்கியோ, 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் வருகிற 25-ந்தேதி புகுஷிமாவில் தொடங்கி அடுத்த 121 நாட்களுக்கு ஜப்பான் முழுவதும் வலம் வர உள்ளது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தீபத்தை ஏந்தி ஓட உள்ளனர். தீப ஓட்டத்தை சாலையோரம் நின்று ஏராளமானோர் பார்த்து ரசித்து உற்சாகப்படுத்துவது உண்டு. அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பார்வையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், உரக்க கத்துவதை தவிர்த்து அமைதியான வழியில் உற்சாகப்படுத்தும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story