பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றி ஸ்ரீகாந்த், காஷ்யப் வெளியேற்றம் + "||" + All England Badminton Indian player Sindhu wins

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றி ஸ்ரீகாந்த், காஷ்யப் வெளியேற்றம்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றி ஸ்ரீகாந்த், காஷ்யப் வெளியேற்றம்
மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.
பர்மிங்காம், 

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதலாவது சுற்றில் 21-11, 21-17 என்ற நேர் செட்டில் சோனியா சியாவை (மலேசியா) தோற்கடித்து வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். சிந்து 2-வது சுற்றில் லினே கிறிஸ்டோபெர்செனை (டென்மார்க்) எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இ்ந்தியாவின் காஷ்யப் 13-20, 20-22 என்ற நேர் செட்டில் நம்பர் ஒன் வீரரும், உலக சாம்பியனுமான கென்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) பணிந்தார். இதே போல் இந்திய முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 11-21, 21-15, 12-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் போராடி நுயேனிடம் (அயர்லாந்து) வீழ்ந்தார். அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி, ஆண்கள் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகிய இந்தியர்கள் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

முன்னதாக போட்டி சம்பந்தப்பட்ட ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதாலும், அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டி இருந்ததாலும் போட்டியை தொடங்குவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: ஒகுஹரா, ஜியா சாம்பியன்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் ஒகுஹரா, ஜியா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
2. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் சிந்து தோல்வி அடைந்தார்.
3. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி காயத்தால் சாய்னா பாதியில் விலகல்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி காயத்தால் சாய்னா பாதியில் விலகல். ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.