சர்வதேச குத்துச்சண்டையில் உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த இந்திய வீராங்கனை


சர்வதேச குத்துச்சண்டையில் உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த இந்திய வீராங்கனை
x
தினத்தந்தி 19 March 2021 3:16 AM GMT (Updated: 19 March 2021 3:16 AM GMT)

சர்வதேச குத்துச்சண்டை போட்டி துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது.

புதுடெல்லி, 

இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் பால்ட்சிவா கேத்ரினாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். 24 வயதான ஜரீன் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஆவார்.

57 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கத்தை வென்று இருக்கும் இந்திய வீராங்கனை சோனியா லாதெர் 5-0 என்ற கணக்கில் துருக்கியின் சுர்மினெலி துக்சினாஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 60 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன் 5-0 என்ற கணக்கில் துருக்கியின் ஜியோல் எஸ்ராவை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவ தபா 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் மாகுலோவ் பாக்தியோவை சாய்த்து கால்இறுதியை எட்டினார்.

Next Story