பிற விளையாட்டு

தேசிய வாள் சண்டை போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பவானி தேவி + "||" + Fencer Bhavani Devi wins ninth National crown

தேசிய வாள் சண்டை போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பவானி தேவி

தேசிய வாள் சண்டை போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பவானி தேவி
தேசிய வாள் சண்டை போட்டியில் பவானி தேவி சாம்பியன் பட்டம் வென்றார்
டெல்லி,

டெல்லியில் நடந்த 31-வது தேசிய சீனியர் வாள்சண்டை போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவின் இறுதி சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி 15-7 என்ற புள்ளி கணக்கில் கேரளாவின் ஜோஸ்னா ஜோசப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன்படி 9வது முறையாக தேசிய பட்டத்தை கைப்பற்றினார்.

சென்னையை சேர்ந்த பவானி தேவி சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் அவர் வாள்சண்டையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்ட முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.