பிற விளையாட்டு

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி + "||" + State Level Volleyball Tournament: SRM Team wins

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி
மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி வெற்றி பெற்றது.
மதுரை, 

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 27-வது ஆண்டு என்.முத்தையா அம்பலம் நினைவு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, திருச்சி, சிவகாசி, காந்தி கிராமம் மற்றும் மதுரையைச் சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. 

இந்நிலையில் கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி (சென்னை) 25-23, 20-25, 25-19, 26-28, 15-12 என்ற செட் கணக்கில் எஸ்.டி.சி. (பொள்ளாச்சி) அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.