டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல்-மனிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல்-மனிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 21 March 2021 12:46 AM GMT (Updated: 21 March 2021 12:46 AM GMT)

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல்-மனிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது.

தோகா, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதி சுற்று டேபிள் டென்னிஸ் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது.

இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் சரத் கமல்-மனிகா பத்ரா ஜோடி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து 8-11, 6-11, 11-5, 11-6, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சாங் சு லீ-ஜிஹீ ஜென் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

இதன் மூலம் சரத் கமல்-மனிகா பத்ரா கூட்டணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது. இருவரும் ஏற்கனவே ஒற்றையர் பிரிவிலும் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதிசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story