பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை ஜரீன் வெண்கலப்பதக்கம் வென்றார் + "||" + Nikhat Zareen, Gaurav Solanki settle for bronze at Bosphorus boxing tournament

சர்வதேச குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை ஜரீன் வெண்கலப்பதக்கம் வென்றார்

சர்வதேச குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை ஜரீன் வெண்கலப்பதக்கம் வென்றார்
சர்வதேச குத்துச்சண்டை போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது.
புதுடெல்லி, 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் முந்தைய 2 சுற்றுகளில் உலக சாம்பியன்களுக்கு அதிர்ச்சி அளித்து இருந்த இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் 2019-ம் ஆண்டு உலக சாம்பியஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துருக்கி வீராங்கனை பூசெனாஸ் சாகிரோக்லுவிடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் காமன்வெல்த் போட்டி சாம்பியனான இந்திய வீரர் கவுரவ் சோலங்கி 0-5 என்ற கணக்கில் அர்ஜென்டினாவின் நிர்கோ குல்லோவிடம் வீழ்ந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.