பிற விளையாட்டு

ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால், ஐரா ஷர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர் + "||" + Orleans Masters: Saina Nehwal Enters Quarters, Ira Sharma Also Through

ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால், ஐரா ஷர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்

ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால், ஐரா ஷர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்
ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் ஐரா ஷர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
பிரான்ஸ்,

ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 18-21, 21-15, 21-10 என்ற செட் கணக்கில் உள்ளூர் வீராங்கனையான மேரி படோமினியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். 

இதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை ஐரா ஷர்மா 21-18, 21-13 என்ற நேர்செட்டில் பல்கேரியாவின் மரியா மிட்சோவாவை வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தார்.