பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு + "||" + Tokyo Olympics: Indian sniper team selected in Tamil Nadu Elavenil

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
இ்ந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை தேர்வு செய்து, தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் நேற்றிரவு அறிவித்தது. இதில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் (பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்) இடம் பிடித்துள்ளார். 21 வயதான இளவேனில் தகுதி சுற்று போட்டிகளின் மூலம் ஒலிம்பிக் இடத்தை பெறா 
விட்டாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒலிம்பிக் கோட்டாவை வென்று தந்தவரும், சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய வீராங்கனையுமான சிங்கி யாதவுக்கு இடம் கிடைக்கவில்லை. இது கொரோனா காலம் என்பதால் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி வருமாறு:-

10 மீட்டர் ஏர் ரைபிள் (ஆண்கள்): திவ்யான்ஷ் சிங் பன்வார், தீபக் குமார். பெண்கள் பிரிவு: அபூர்வி சண்டேலா, இளவேனில் வாலறிவன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை (ஆண்கள்): சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், பெண்கள்: அஞ்சும் மோட்ஜில், தேஜஸ்வினி சவாந்த், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (ஆண்கள்): சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, பெண்கள்: மானு பாகெர், யஷாஸ்வினி சிங் தேஸ்வால்.

25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் (பெண்கள்): ராஹி சர்னோபத், மானு பாகெர்.

ஸ்கீட் (ஆண்கள்): அங்கட் விர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி: திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில், தீபக்குமார், அஞ்சும் மோட்ஜில். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி: சவுரப் சவுத்ரி, மானு பாகெர், அபிஷேக் வர்மா, யஷாஸ்வினி.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டோக்கியோ ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் இன்று தொடங்கியது
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஓட்டம் இன்று தொடங்கியது.இந்த 121 நாள் ஓட்டத்தில் 10,000 போ் பங்கேற்று ஜோதியை ஏந்தவுள்ளார்கள்.
3. டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் -இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை
டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் என இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
4. கொரோனா பாதிப்பு : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய ஜப்பான் அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் கிடையாது - போட்டி அமைப்பாளர்கள் தகவல்
அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.