கொரோனா பாதிப்பு உயர்வு; அனைத்து உள்ளூர் பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளி வைப்பு + "||" + Increased corona exposure; Postponement of all local badminton tournaments
கொரோனா பாதிப்பு உயர்வு; அனைத்து உள்ளூர் பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளி வைப்பு
நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்வால் அனைத்து உள்ளூர் பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன. நேற்று 1 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் பதிவாகின. இது நாட்டில் பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து 24 மணிநேரத்தில் மிக அதிக அளவாகும்.
இதனை முன்னிட்டு இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அனைத்து உள்ளூர் பேட்மிண்டன் போட்டிகளையும் தள்ளி வைப்பது என முடிவு செய்துள்ளது. இதனை அந்த அமைப்பின் தலைவர் ஹிமந்தா பிஸ்வா முடிவு செய்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக வருகிற 18ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெங்களூருவில் நடைபெற இருந்த பேட்மிண்டன் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகின்றன. வருகிற மே மாதத்தில் ஐதராபாத்தில் நடைபெற இருந்த ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளி வைக்கப்படுகின்றன.
பெங்களூருவின் நகர்ப்புறத்தில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு 6 முதல் 9 வரையிலான வகுப்புகள் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என கல்வி மந்திரி கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி கூடங்களும் நாளை முதல் வருகிற 31ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும்.