பிற விளையாட்டு

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து + "||" + International badminton tournaments canceled

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து
ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜூலை 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அதிகரிப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்த நாட்டு பேட்மிண்டன் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து இந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.