பிற விளையாட்டு

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு சென்னை வீராங்கனை தகுதி பெற்று சாதனை + "||" + Chennai's Nethra Kumanan becomes first Indian woman sailor to qualify for Olympics

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு சென்னை வீராங்கனை தகுதி பெற்று சாதனை

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு சென்னை வீராங்கனை தகுதி பெற்று சாதனை
முஸ்சானா ஓபன் பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி ஓமனில் நடந்து வருகிறது.

ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்றான இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் லேசர் ரேடியல் பிரிவில் நேற்று முதலிடத்தை உறுதி செய்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். தனது பந்தயத்தில் இன்னும் ஒரு சுற்று எஞ்சியுள்ள நிலையிலேயே ஒலிம்பிக் வாய்ப்பை வசப்படுத்தி விட்டார். ஒலிம்பிக்கில் பாய்மர படகு போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள 22 வயதான நேத்ரா சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.