பிற விளையாட்டு

மத்திய விளையாட்டுத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona vulnerability to federal sports minister

மத்திய விளையாட்டுத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

மத்திய விளையாட்டுத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி, 

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி 49 வயதான கிரண் ரிஜிஜூ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரண் ரிஜிஜூவுக்கு அதன் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தாம் நல்லநிலையில் இருப்பதாகவும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.