பிற விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி + "||" + Formula 1 car racing: Dutchman Verstappen wins

பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி

பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியில் நேற்று நடந்தது.
இமோலா, 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியில் நேற்று நடந்தது. 309.049 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 2 மணி 02 நிமிடம் 34.598 வினாடிகளில் இலக்கை கடந்து நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. அவரை விட 22 வினாடி மட்டுமே பின்தங்கிய நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். லான்டோ நோரிஸ் (இங்கிலாந்து) 3-வதாக வந்தார்.

இதுவரை நடந்துள்ள இரண்டு சுற்று முடிவில் ஹாமில்டன் 44 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெர்ஸ்டப்பென் 43 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 3-வது சுற்று போட்டி போர்ச்சுக்கலில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அஜித்தை தொடர்ந்து கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் நடிகை நிவேதா பெத்துராஜ்
நடிகர் அஜித்தை தொடர்ந்து கார் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ்