பிற விளையாட்டு

உலக இளையோர் குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி + "||" + 4 Indian boxers qualify for semi-finals of World Youth Boxing

உலக இளையோர் குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி

உலக இளையோர் குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி
உலக இளையோர் குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி.
புதுடெல்லி, 

உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்தில் நடந்து வருகிறது. இதில் 60 கிலோ உடல் எடைப்பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஆசிய சாம்பியனான இந்திய வீராங்கனை வின்கா 5-0 என்ற கணக்கில் கமிலாவை (கொலம்பியா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். இதே போல் ஜித்திகா (48 கிலோ), ஆல்பியா பதான் (81 கிலோவுக்கு மேல்), பூனம் (57 கிலோ) ஆகிய இந்திய மங்கைகளும் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று குறைந்தது வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தனர். மற்றொரு இ்ந்திய வீராங்கனை குஷி (81 கிலோ) துருக்கியின் பஸ்ரா இசில்தாரிடம் தோற்று வெளியேறினார்.