பிற விளையாட்டு

உலக இளையோர் குத்துச்சண்டை: மேலும் 7 இந்தியர்கள் அரைஇறுதிக்கு தகுதி + "||" + World Youth Boxing 7 more Indians Qualifying for the semifinals

உலக இளையோர் குத்துச்சண்டை: மேலும் 7 இந்தியர்கள் அரைஇறுதிக்கு தகுதி

உலக இளையோர் குத்துச்சண்டை: மேலும் 7 இந்தியர்கள் அரைஇறுதிக்கு தகுதி
உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.
புதுடெல்லி, 

இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பேபிரோஜிசனா சானு 5-0 என்ற கணக்கில் ஐரோப்பிய இளையோர் சாம்பியனான அலெக்ஸ் குபிகாவை (போலந்து) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதேபோல் கால்இறுதியில் இந்திய வீராங்கனைகள் அருந்ததி சவுத்ரி (69 கிலோ), சனமச்சா சானு (75 கிலோ) ஆகியோரும் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தனர். ஆண்களுக்கான கால்இறுதியில் 49 கிலோ எடைப்பிரிவில் ஆசிய ஜூனியர் சாம்பியனான இந்திய வீரர் பிஷ்வாமித்ரா சோங்தம் 5-0 என்ற கணக்கில் செர்பியாவின் ஒமெர் அமிடோவிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்ற இந்திய வீரர்களான அங்கித் நார்வால் (64 கிலோ), விஷால் குப்தா (91 கிலோ). சச்சின் (56 கிலோ) ஆகியோரும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். ஏற்கனவே 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து இருந்தனர். இதன் மூலம் இந்தியா மொத்தம் 11 பதக்கங்களை உறுதி செய்துள்ளது.