பிற விளையாட்டு

கொரோனா பரவல் அச்சம்: வீரர்கள் வெளிநாட்டு பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்; இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆலோசனை + "||" + Fear of corona spread: players should be careful when traveling abroad; Indian Olympic Association Consultation

கொரோனா பரவல் அச்சம்: வீரர்கள் வெளிநாட்டு பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்; இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆலோசனை

கொரோனா பரவல் அச்சம்: வீரர்கள் வெளிநாட்டு பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்; இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆலோசனை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் வெளிநாடு சென்று பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா, தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், ‘கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பயிற்சி முகாமில் உள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்லும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் தங்கள் பயணத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பயணங்களில் கவனமாக செயல்பட வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். செல்லும் இடங்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும். இதேபோல் வெளிநாடு செல்லும் முன்பு அந்த நாட்டின் கொரோனா தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி திட்டம் வகுத்து செயல்படுவது அவசியமானதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 48,550 பேருக்கு தொற்று..!
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிப்பு அடைந்துள்ளன.
2. டெல்லியில் இன்று 65 பேருக்கு கொரோனா; 36 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 404 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. கேரளாவில் இன்று 5,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 40,959 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் புதிதாக 31,096 பேருக்கு கொரோனா: மேலும் 1,182 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று 51 பேருக்கு கொரோனா; 19 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 376 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.