பிற விளையாட்டு

கொரோனா பாதிப்பு உயர்வு; உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து + "||" + Increased corona exposure; World Cup sniper tournament canceled

கொரோனா பாதிப்பு உயர்வு; உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து

கொரோனா பாதிப்பு உயர்வு; உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து
கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு அஜர்பைஜானில் நடைபெற இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
முனிச்,

இந்தியாவின் புதுடெல்லி நகரில் கடந்த மார்ச் மாதத்தில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன.  மொத்தம் 10 நாட்கள் நடந்த இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  22 நாடுகளின் வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2021 நடைபெற இருந்தது.  ஆனால், அந்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் போட்டியை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. 
இதுபற்றி சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், அஜர்பைஜானில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கவனத்தில் கொண்டு அஜர்பைஜான் குடியரசின் மந்திரிகள், போட்டியை நடத்துவது முறையாக இருக்காது மற்றும் பாதுகாப்பற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 21ந்தேதி முதல் ஜூலை 2ந்தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் கொரோனா பாதிப்பு உயர்வு: 3 வாரங்களுக்கு அவசரகால நிலை நீட்டிப்பு
ஜப்பானில் வருகிற 11ந்தேதி முதல் 31ந்தேதி வரை 3 வாரங்களுக்கு அவசரகால நிலை நீட்டிக்கப்படுகிறது என அரசு உத்தரவிட்டு உள்ளது.
2. கொரோனா தாக்கத்தால் பயணிகள் வரத்து குறைவு சென்னை விமான நிலையத்தில் 42 விமானங்கள் ரத்து
கொரோனா தாக்கம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
3. கொரோனா தாக்கத்தால் பயணிகள் வரத்து குறைவு சென்னை விமான நிலையத்தில் 42 விமானங்கள் ரத்து
கொரோனா தாக்கத்தால் பயணிகள் வரத்து குறைவு சென்னை விமான நிலையத்தில் 42 விமானங்கள் ரத்து.
4. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு; வருகிற ஜூன் 15ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறாது என அறிவிப்பு வெளியீடு
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு வருகிற ஜூன் 15ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் 30ந்தேதி வரை இலங்கையில் அனைத்து பள்ளிகளையும் மூட முடிவு
இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வால் வருகிற 30ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன.