பிற விளையாட்டு

டெல்லியில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை போட்டி துபாய்க்கு மாற்றம் + "||" + UAE to host Asian Boxing Championship in solidarity with India

டெல்லியில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை போட்டி துபாய்க்கு மாற்றம்

டெல்லியில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை போட்டி துபாய்க்கு மாற்றம்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் அடுத்த மாதம் (மே) 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எகிறி வருவதால் இந்த போட்டியை இங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள எங்களது நண்பர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆசிய குத்துச்சண்ைட சாம்பியன்ஷிப் டெல்லி-துபாய் என்ற பெயரிலேயே நடத்தப்படும் என்று அமீரக குத்துச்சண்டை சங்கம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய குத்துச்சண்டையில் 5-வது பதக்கம்: கொரோனாவை தோற்கடித்தது போன்று உணர்கிறேன்: இந்திய வீரர் ஷிவதபா பேட்டி
துபாயில் நடந்து வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவதபா 64 கிலோ உடல் எடைப்பிரிவில் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.