பிற விளையாட்டு

ஒலிம்பிக் தகுதி சுற்று மல்யுத்தம்: 2 இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி + "||" + Olympic Qualifying Round Wrestling: 2 Indian players qualify for the quarterfinals

ஒலிம்பிக் தகுதி சுற்று மல்யுத்தம்: 2 இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் தகுதி சுற்று மல்யுத்தம்: 2 இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நேற்று தொடங்கியது.

இதில் ஆண்களுக்கான 74 கிலோ உடல் எடைப்பிரிவின் தொடக்க சுற்றில் இந்திய வீரர் அமித் தன்கர் 6-9 என்ற புள்ளி கணக்கில் மால்டோவா வீரர் மிகைல் சாவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த எடைப்பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பு பறிபோனது. 97 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சத்யவார்த் காடியன் 5-2 என்ற புள்ளி கணக்கில் புயர்டோரிகோ வீரர் இவான் அமாதோர் ரமோஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் 125 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சுமித் மாலிக் 3-2 என்ற புள்ளி கணக்கில் மால்டோவா வீரர் அலெக்சாண்டர் ரோமனோவை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதிபெற்றார்.
2. ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறேன்’ துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் பேட்டி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி வருகிறேன் என்று இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் தெரிவித்தார்.
4. கொரோனா பாதிப்பு எதிரொலி: ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இருந்து இந்திய ஜூடோ அணி விலகல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய ஓசியானா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகரில் நடந்து வருகிறது.