மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைப்பு; சாய்னா, ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு


மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைப்பு; சாய்னா, ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு
x
தினத்தந்தி 8 May 2021 6:07 AM GMT (Updated: 2021-05-08T11:37:51+05:30)

மொத்தம் ரூ.4½ கோடி பரிசுத்தொகைக்கான மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் வருகிற 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் மலேசியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வேறு வழியின்றி இந்த போட்டியை தள்ளிவைப்பதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது. இனி ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாக இந்த போட்டி இடம் பெறுவதற்கு காலஅவகாசம் இல்லை. போட்டிக்கான புதிய தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தங்களது தரவரிசையை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்து வரும் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், இரட்டையர் ஜோடியான அஸ்வினி- சிக்கி ரெட்டி ஆகியோருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஒலிம்பிக் பேட்மிண்டனுக்கான கடைசி தகுதி சுற்றாக சிங்கப்பூர் ஓபன் போட்டி ஜூன் 1-ந்ேததி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் இருந்து விமானங்கள் வருவதற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்திருப்பதாலும், 14 நாள் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் இருப்பதாலும் இந்த போட்டியிலும் இந்திய பேட்மிண்டன் அணியினர் பங்கேற்க வாய்ப்பில்லை.


Next Story