கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட கண்காட்சி செஸ் போட்டி - ஆனந்த் உள்பட 5 கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்பு


கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட கண்காட்சி செஸ் போட்டி - ஆனந்த் உள்பட 5 கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 11 May 2021 9:15 PM GMT (Updated: 11 May 2021 9:15 PM GMT)

கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட கண்காட்சி செஸ் போட்டியில் ஆனந்த் உள்பட 5 கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு மற்ற வீரர், வீராங்கனைகளுடன் விளையாடுகிறார்கள்.

புதுடெல்லி,

அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட கண்காட்சி செஸ் போட்டி ஆன்லைன் மூலமாக நாளை (வியாழக்கிழமை) நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 5 முறை உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் மற்றும் கிராண்ட்மாஸ்டர்கள் கோனேரு ஹம்பி, ஹரிகா, நிஹல் சரின், பிரக்ஞானந்தா ஆகியோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு மற்ற வீரர், வீராங்கனைகளுடன் விளையாடுகிறார்கள். இந்த போட்டியில் ஆனந்துடன் விளையாட விரும்புபவர்கள் ரூ.11 ஆயிரமும், மற்ற 4 பேருடன் மோத விரும்புபவர்கள் ரூ.1,800-ம் கட்டணமாக செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை செஸ் காம் என்ற இணையதளத்தின் மூலம் நேரலையில் பார்க்கலாம். அப்போது நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story