பிற விளையாட்டு

ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு + "||" + In Japan, 80 percent of the population opposes hosting the Olympics

ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு

ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு
ஜப்பானில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அந்நாட்டில் 80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான 4வது அலை வீசி வருகிறது.  இதனால் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய பெருநகர பகுதிகள் உள்பட 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா, கடந்த ஏப்ரல் 25ந்தேதி முதல் மே 11ந்தேதி வரை 4 மாகாணங்களில் அவசரகால நிலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினார்.

இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாகாணங்களில் மக்களின் போக்குவரத்து குறையும் வகையில் குறைந்த கால அளவுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் மற்றும் சேவைகள் தவிர்த்து மற்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  மிக பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதிக்கப்படவில்லை.  மதுபான கூடங்களும் மூடப்பட்டன.  மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சூழலில், கடந்த வாரம் பொருளாதார மந்திரி யசுடோஷி நிஷிமுரா கூறும்பொழுது, கடுமையான அவசரகால நிலை உத்தரவால் கொரோனாவின் 4வது அலை கட்டுப்படும் என அரசு நம்பிக்கை கொண்டிருந்தது.

ஆனால், டோக்கியோ, ஒசாகா ஆகிய மாகாணங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  அதனால், ஜப்பானில் அவசரகால நிலையானது மே 31ந்தேதி வரை 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.  இந்த நடைமுறை கடந்த வாரம் (11ந்தேதி) முதல் அமலுக்கு வந்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் 10 வாரங்களே மீதமுள்ளன.  இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட் சர்வே ஒன்றில், ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த சர்வேயில், 1,527 பேர் பங்கு பெற்றனர். அவர்களில் 43 சதவீதத்தினர் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 40 சதவீதத்தினர், நாட்டில் கொரோனா பாதிப்பினை முன்னிட்டு போட்டிகளை வேறு நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் பதிலளித்து உள்ளனர்.

போட்டிகளை நடத்த 14 சதவீதத்தினரே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.  இந்த ஆதரவு, கடந்த மாதத்தில் நடந்த சர்வேயில் 28 சதவீதத்தினர் என்ற அளவில் இருந்தது.

சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 59 சதவீதத்தினர், ஒருவேளை போட்டி நடத்தப்பட்டால் ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என்றும், 33 சதவீதத்தினர் குறைவான ரசிகர்கள் வரலாம் என்றும் தெரிவித்தனர்.  வழக்கம்போல் போட்டிகளை நடத்தலாம் என 3 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்து உள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வர கூடிய போட்டியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரால் கொரோனா வைரசானது பரவ கூடிய ஆபத்து உள்ளது என்று 87.7 சதவீதம் பேர் கவலை தெரிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நெற்குன்றத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை அகற்ற எதிர்ப்பு
நெற்குன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை க்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள்,வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். மேலும் ஒரு பெண், மாடியில் இருந்து போலீசார் மீது மண்எண்ணெய் ஊற்றி எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கட்டாய தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் போராட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரசின் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விளம்பர படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் எதிர்ப்பால் தலீபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல்!
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முடிவை இரண்டாவது முறையாக தலீபான்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
5. செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பணியை நிறுத்தினர்.