பிற விளையாட்டு

முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona positive to former sprinter Milkha Singh

முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா பாதிப்பு
இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘பறக்கும் சீக்கியர்’ என்று வர்ணிக்கப்படும் மில்கா சிங்கிற்கு தற்போது 91 வயது ஆகிறது. இந்த நிலையில் தனக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சண்டிகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மில்கா சிங், “எங்கள் உதவியாளர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் என் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அதில் என்னைத் தவிர அனைவருக்குக் நெகட்டிவ் எனவும் எனக்கு மட்டும் பாசிட்டிவ் எனவும் முடிவு வந்துள்ளது. 

நான் நலமாக இருக்கிறேன். காய்ச்சலோ, இருமலோ கிடையாது, நான் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் குணமடைந்துவிடுவேன் என்று என் குடும்ப மருத்துவர் தெரிவித்தார். நேற்று கூட ஜாக்கிங் உடற்பயிற்சி மேற்கொண்டேன். நல்ல நிலையில் என் உடல்நலம் இருக்கிறது” என்று மில்கா சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தடகள ஜாம்பவான் மில்கா சிங், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய வாழ்க்கையை தழுவி இந்தியில் ‘பாக் மில்கா பாக்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் நேற்று புதிதாக 488 பேருக்கு கொரோனா பாதிப்பு
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அசாமில் இன்று 407 பேருக்கு கொரோனா; 604 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,533 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மும்பையில் நேற்று 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மும்பையில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளது.
5. அசாமில் இன்று 441 பேருக்கு கொரோனா; 338 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 5,813 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.